உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடன் கூட இருக்கிறேன்வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் பயங்கரமான போர் நடந்துக்கொண்டிருந்த நேரம் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை ஒரு போர் வீரன் அவளது தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். போரில் நான் பிழைப்பேனோ தெரியவில்லை. பிறக்கபோகும் குழந்தையை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டியது உன்னுடைய கடமை என்று சொல்லி கண்ணீரோடு விடை பெற்றார்.
போக்குவரத்து சரியாக இல்லாத காலம் அது. அந்த கர்ப்பிணி பெண் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு நடந்தே சென்றாள். பாதி தூரம் போயிருப்பாள். கொட்டும் பணியில் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
தொலைவில் தெரிந்த சிலுவையை பார்த்த அவள், அங்கு சென்றால் ஏதாவது உதவி கிடைக்கலாம் என்று எண்ணி நடந்தாள். வலி அதிகரித்ததால் அங்கிருந்த பாலத்தின் அடியில் ஒதுங்கினாள். சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பெற்றாள். அந்த குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியாமல் துணியை சுற்றிவிட்டு குளிரில் விறைத்து இறந்து போனாள்.
அதிகாலையில் அந்த வழியாக வந்த போதகர், குழந்தை அழும் குரலை கேட்டு அங்கு வந்து பார்த்தார். அந்த தாய் உடலில் ஒட்டு துணிக் கூட இல்லாமல் இறந்து கிடந்ததைக் கண்ட போதகர் குழந்தையை எடுத்து சென்று வளர்க்க ஆரம்பித்தார்.
எட்டு வயதான அந்த சிறுவன் போதகரிடம் தன்தாய், தகப்பன் பற்றி கேட்டான்.
போதகரும் நடந்ததை கூறி அவனது தாயின் கல்லறையை காண்பித்தார்.
தாயின் தியாகத்தை நினைத்து கல்லறையின் மீது விழுந்து அழுதான்.
அப்போது போதகர், உன் தாயின் தியாகத்தை நினைத்து நீ கலங்குகிறாய். அதைவிட சிறந்த தியாகம் ஒன்று உண்டு. இந்த ஆலயத்தின் மேலே உள்ள சிலுவையை பார். அதுதான் அந்த தியாகத்தின் சின்னம். உன் தாய் உன்னை பிரசவித்து விட்டு குளிரில் இருந்து உன்னை காப்பாற்ற தனது துணியை சுற்றிவிட்டு இறந்து போனாள். ஆனால் உன் மீது அளவற்ற அன்பு கொண்டு தாங்கமுடியாத கொடுமைகளை தாங்கி, கடைசி சொட்டு ரத்தத்தையும் உனக்காக சிந்தி சிலுவையில் மரித்த ஆண்டவரின் அன்புக்கு ஈடு இணை இல்லை. தாயும், தகப்பனும் கைவிட்டாலும் அவர் உன்னை கைவிடமாட்டார் என்றார்.
கர்த்தரின் தியாகத்தை உணர்ந்த அவன் தன் வாழ்க்கையை அவருக்காக ஒப்படைத்தான்
கர்த்தர் உங்கள் மேல் வைத்த அன்பு முடிவு பரியந்தம் நீடித்திருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக