அவன் செய்கிறான் நான்
செய்கிறேன்.
ஏன் செய்கிறான்?
எனக்குத் தெரியாது
ஆனாலும் அவன்
செய்வதால் நான் செய்கிறேன்.
மாதந்தோறும் ஒரு
புடவை கொடுக்கிறான்
அதேபோல் நானும்
கொடுக்கிறேன்.
தேவைக்கு பணமும்
கொடுக்கிறான்
நானும் கொடுக்கிறேன்.
இரண்டு மாதத்திற்கு
ஒருமுறை
பார்க்கப் போகிறான்,
நானும்தான்.
அடப்பாவி,
அவன் செய்கிறான்
என்பதற்காக
நீயும் செய்ய
வேண்டுமா?
அண்டை வீட்டுக்காரன்
அவன் செய்யும்போது
நான் மட்டும் எப்படி
செய்யாமலிருப்பது?
இடைஞ்சலாய்
இருக்கிறாள்னு
பொண்டாட்டி பேச்சை
கேட்டு
அம்மாவை முதியோர்
இல்லத்தில்
அவன் சேர்க்கலாம்
நான் மட்டும் சேர்க்க
கூடாதா?
அவனை விட நான் ரொம்ப
மேல்
இப்பக்கூட அன்னையர்
தினத்திற்காக
அம்மாவை வாழ்த்தி
எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கிறேன்
முதியோர்
இல்லத்திற்கு.
அவனுக்கு தெரியாத
ஒன்றை
நான் செஞ்சிட்டேன்.
இப்படியும் பலர்....
இப்படியும் பலர்....
(ஒத்த பிள்ளையை
பெத்தேன், ஓரமா ஒதுக்கிட்டான் என்ன. வாழ்த்து ஒன்னுதான் கொறச்சல் எனக்கு- தாயின்
ஆதங்கம் முதியோர் இல்லத்தில்)
